திருவாரூரின் பல்வேறு பகுதிகளில் கனமழை
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நன்னிலம், திருக்கண்டீஸ்வரம், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மேலும் தொடர் கனமழையால் ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.