CRIME | IAS,IPS கையெழுத்திட்டு கோடிக்கணக்கில் சுருட்டிய பெண் கடலூரில் அதிர்ச்சி
கடலூரில் போலி பத்திரம் மூலம் பல லட்சம் மோசடி - பெண் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் உயர் அதிகாரிகளின் கையொப்பங்களுடன் கூடிய போலி பத்திரத்தை காட்டி, பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வீராணநல்லூரை சேர்ந்த அகல்யா என்பவர்,
காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள தனியார் வங்கி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு நகைகளை மீட்க வரும் பெண்களை குறிவைத்து, அவர்களிடம் தான் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருவதாகவும், தனக்கு தெரிந்த நபர் ஒருவரிடம் கோடிக்கணக்கில் கருப்பு பணம் உள்ளதாகக் கூறி, வட்டியில்லா கடன் என்கிற பெயரில், மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் கையொப்பங்களுடன் கூடிய போலி பத்திரத்தை காண்பித்து, லட்சக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் படித்த இளைஞர்களிடம் அரசியல் பிரமுகர்கள் பெயரை குறிப்பிட்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அகல்யா மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் போலீசார், அகல்யாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.’