Chennai Cooum River | தூண்டிலில் சிக்கிய ஆண் சடலம்.. சென்னை கூவம் ஆற்றில் அதிர்ச்சி

Update: 2025-12-07 04:49 GMT

மீனுக்காக வீசப்பட்ட தூண்டிலில் சிக்கிய ஆண் சடலம்

சென்னை,கோயம்பேடு அருகே கூவம் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக வீசப்பட்ட தூண்டிலில் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டு, கூவம் ஆற்றில் நீர் ஆர்பரித்து செல்கிறது. இந்த நிலையில் திருமங்கலத்தை அடுத்த பாடி குப்பம் பகுதியில் உள்ள நபர்கள் கூவம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தூண்டிலில் மீன் சிக்கியதாக நினைத்து இழுத்த போது இழுக்க முடியாமல் தவித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் உதவியுடன் எடுத்த போது அதில் ஒரு ஆண் சடலம் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்