Bus Accident | கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய பேருந்து.. பூந்தமல்லியில் பரபரப்பு

Update: 2025-10-30 10:58 GMT

பூந்தமல்லி அருகே, கர்நாடக அரசுப் பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

கர்நாடகாவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்பேடு நோக்கி கர்நாடக அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடி அருகே, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது பேருந்து மோதியதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்ததில், பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில், 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விபத்தில் சிக்கிய வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்