நெல்லையில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

Update: 2025-12-07 11:46 GMT

நெல்லை பாளையங்கோட்டை பொட்டல் பகுதியில் கார் மூலம் கஞ்சா கடத்திய இருவரை தூத்துக்குடி மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை.

பாளையங்கோட்டை பொட்டல் பகுதியில் காரில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சாவும் பறிமுதல். தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரால் நிதீஷ் குமார் சுரேஷ்குமார் ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டதில் சம்பவத்தில் தொடர்புடைய தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கலைஞர் என்பவரை பிடிக்க முயற்சி செய்தபோது விஷமருந்தி நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதி, பாளையங்கோட்டை பகுதியில் கஞ்சா கடத்தப்பட்ட காரை போலீசார் பிடிக்க முயற்சித்த நிலையில் வேறு ஒரு காரில் கஞ்சாவை அனுப்பி வைத்த கடத்தல் காரர்கள்

நெல்லை மாநகர் தச்சநல்லூர் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த சொகுசு காரில் இருந்து 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை.

கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் பறிமுதல்.

மொத்தமாக நெல்லை மாநகர் பகுதியில் கார் மூலம் கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்