பேசிக்கொண்டே நயினார் கன்னத்தில் அடித்து விளையாடிய ஜெயக்குமார் - தீயாய் பரவும் வீடியோ
நயினார் நாகேந்திரன் கன்னத்தில் அடித்து விளையாடிய ஜெயக்குமார்
சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவரை கன்னத்தில் அடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளையாடினார்.
சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 130 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில தலைவர் நையினார் நாகேந்திரன் கன்னத்தில் செல்லமாக அடித்தார். பின் இருவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டனர்.