Rahul Gandhi | PM Modi | ``அவரது விருப்பம் அதுதான்'' - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

Update: 2025-11-05 02:16 GMT

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி

பீகார் இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் கல்வி குறித்து கேள்வி கேட்காமல் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பீகாரை சேர்ந்த மக்கள் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்களாக வேலை செய்வதை சுட்டி காட்டிய ராகுல் காந்தி, நிதீஷ் குமார் பீகாரிகளை நாட்டின் தொழிலாளர்களாக மாற்றி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

ஆனால் பிரதமர் மோடி பீகார் இளைஞர்களிடம் நாங்கள் உங்களுக்கு மலிவான விலையில் இணையதள டேட்டாவை வழங்கியுள்ளோம் எனவே ரீல்ஸ் செய்யுங்கள் என்று கூறுவதாக குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி,

பீகார் இளைஞர்கள் ரீல்ஸ் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அதானி - அம்பானியின் பைகளுக்கு பணம் செல்லட்டும் என்றும் பிரதமர் மோடி விரும்புவதாக விமர்சித்துள்ளார்.

பீகார் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நன்கு தெரியும் என்று தெரிவித்துள்ள அவர்,

பீகார் மக்கள் விழிப்புடன் இருப்பதால் அவர்களின் வாக்குகளை திருட முடியாது என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்