ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி

Update: 2025-11-04 03:03 GMT

உலகம் முழுவதும் சுற்றும் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ராஜ குடும்பங்கள் ஏன் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல நேரம் ஒதுக்கவில்லை? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். பீகாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வெளிநாட்டு பண்டிகைகளைக் கொண்டாடும் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ராஜ குடும்பங்கள், நமது சத் பூஜையை நாடகம் எனக் கூறி அவமதித்ததாக விமர்சித்தார். மேலும், அவர் வளர்ச்சி என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் அடையாளம் என்றும், அழிவு என்பது காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணியின் அடையாளம் என்றும் கூறினார். பீகாரில் உள்ள 1.40 கோடி சகோதரிகளின் வங்கி கணக்கிற்கு பத்தாயிரம் ரூபாய் சென்றடைந்துள்ளதை நிறுத்த வேண்டும் என ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நினைப்பதாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாளந்தா பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவோம் என ராகுல் காந்தி கூறி வருவதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் அரசு நாளந்தா பல்கலைக்கழக மறுசீரமைப்புக்கு வெறும் இருபது கோடி ரூபாய் மட்டுமே வழங்கிய நிலையில், பாஜக அரசு இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்