Chennai | Aiadmk | திடீரென போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த அதிமுகவினர் - சென்னையில் பரபரப்பு
சென்னையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக, அதிமுக வியூக வகுப்பாளர்கள் 2 பேரை போலீசார், விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட தியாகேஷ்வரன் என்பவர் அளித்த தகவலின் பேரில் தேனாம்பேட்டையை சேர்ந்த பட தயாரிப்பாளர் முஸ்தான் சர்புதீனிடம் இருந்து 28 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அவரையும் கைது செய்தனர்.
பின்னர், முகப்பேரை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் இருந்து 10 கிராம் ஓஜி கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரையும் போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, தேனாம்பேட்டையில் அதிமுக வியூக வகுப்பாளர்களான ஹரி பிரசாத், சாய் ஆகிய இருவரையும் போலீசார், விசாரணைக்காக அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அங்கு அதிமுகவினர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணைக்குப் பிறகு இருவரும் விடுவிக்கப்பட்டனர்.