LIVE: Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.12.2025) | 1 PM Headlines | ThanthiTV
- கோவா நைட் கிளப் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் தலா 2 லட்சம் ரூபாயும் கோவா அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தும் சிறப்பு முகாம் மாநகராட்சி சார்பில் 7 இடங்களில் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமை பயன்படுத்திக்கொள்ள செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மதுரை மேலமடையில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் வகையில் 150 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கழிவு பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர்.