Rajasthan | Money | சாலையில் விழுந்த பணக்கட்டு.. நடுரோட்டிலேயே பைக்கை நிறுத்தி தூக்கி ஓடிய இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-12-07 03:44 GMT

சாலையில் விழுந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய இளைஞர்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சாலையில விழுந்த பணக் கட்டை மின்னல் வேகத்துல இளைஞர்கள் எடுத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது..

ஜெய்ப்பூரில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்த ஒரு குடும்பத்தினர் பர்கத் நகரில் உள்ள கடைத்தெருவில் ஷாப்பிங் செய்துவிட்டு சாலையை கடக்கும் போது, அவர்களிடம் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம், சாலையில் விழுந்துள்ளது. இதனை கண்ட இளைஞர்கள், மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று பணக் கட்டை எடுத்துக் கொண்டு தப்பியோடினர். இதனை கண்ட பெண்கள், பணத்தை எடுத்த இளைஞர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட போதும் அவர்கள் தப்பியோடினர். இந்த முழு சம்பவத்தின் காட்சிகளும் அக்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்