மணமகனான பகவான் கிருஷ்ணர்..? சிலையுடன் இளம்பெண்ணுக்கு திருமணம்

Update: 2025-12-09 14:32 GMT

கிருஷ்ணரின் சிலையை மணமகனாக கருதி இளம் பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பதாயுன் பகுதியை சேர்ந்த 28 வயதான பிங்கி ஷர்மா, கிருஷ்ணர் கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் மோதிரம் இருந்ததாகவும், அதன் பிறகு தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, கடவுள் கிருஷ்ணரே தன்னை ஏற்றுக் கொண்டதால் அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்