Kerala | Red Alert | ``மண் புரளும்’’ - கேரளாவில் ரெட் அலர்ட்
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - மண்சரிவு ஏற்பட வாய்ப்பு
கேரள மாநிலத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ஆலப்புழா, பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் இதேபோல, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா கடற்கரை பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசவும், கடல் அரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக, 204.4 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மண் சரிவு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.