ஒரு கயிறில் 3 உயிர்கள்.. பிடியை விட்டால் கதை முடிந்தது -நொடிக்கு நொடி இதயமே திக்..திக்..

Update: 2025-06-20 06:41 GMT

கரைபுரண்டு ஓடிய வெள்ளம் - குழந்தையுடன் தவித்தவர்கள் பத்திரமாக மீட்பு

பீகார் மாநிலத்தில், கயாவில் உள்ள ஃபால்கு (Falgu) ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்தவர்கள் கயிறு மூலம் மீட்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக, பீகாரின் கயா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஃபால்கு (Falgu) ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், ஆற்றின் மைய பகுதியில் ஒரு சிலர் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்ததால் ஆற்றில் கட்டப்பட்ட பாலத்திற்கு அடியில் தஞ்சம் புகுந்தனர். இதற்கிடையே, திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், பாலத்திற்கு அடியில் அவர்கள் குழந்தையுடன் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த, தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறுகள் உள்ளிட்டவை மூலம் ஆற்றில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்