முதலாளி மனைவியிடம் சிரித்துப் பேசிய டிரைவர்- இருவருக்கும் அடி, உதை

Update: 2025-11-16 07:55 GMT

கர்நாடக மாநிலம், பால்கோட்டையில் முதலாளியின் மனைவியிடம் சிரித்து பேசியதற்காக டிரைவரையும், முதலாளி மனைவியையும் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யங்கப்ப சூரி என்பவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்த பிரகாஷ் என்ற இளைஞர், யங்கப்பசூரியின் மனைவியிடம் அடிக்கடி சிரித்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் தகாத உறவு இருக்குமோ என சந்தேக்கித்த யங்கப்ப சூரி, இருவரையும் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, யங்கப்ப சூரி உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்