Bihar Election2025 | பெண்களுக்கு ரூ.30,000 - நாட்டையே திரும்ப வைத்த தேர்தல் வாக்குறுதி
Bihar Election2025 | பெண்களுக்கு ரூ.30,000 - நாட்டையே திரும்ப வைத்த தேர்தல் வாக்குறுதி;
பீகாரில் ஆட்சியமைத்தால், மகர சங்கராந்தி அன்று பெண்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவையொட்டி அவர் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது இந்த வாக்குறுதியை அறிவித்த தேஜஸ்வி, தாங்கள் அறிவித்த உரிமைத் தொகை திட்டத்தின்படி ஒரே தவணையாக வரும் மகர சங்கராந்தியின்போது இந்தத் தொகை விடுவிக்கப்படும் என கூறினார்.