Air India Flight | ஏர் இந்தியா விமானத்தில் அடுத்த பரபரப்பு - காரணத்தை கேட்டு அதிர்ந்த பயணிகள்

Update: 2025-06-16 02:44 GMT

அசாம் மாநிலம், கவுகாத்தியில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, 18 மணி நேர தாமதத்திற்குப் பின் மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்படனர். கவுகாத்தியில் இருந்து 170 பயணிகளுடன் கொல்கத்தாவுக்கு சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு விமானம் புறப்படத் தயாரானபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. நள்ளிரவுக்குப் பிறகும் கோளாறை சரி செய்ய முடியாததால், பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு விமானம் புறப்பட தயாரானபோதும், கோளாறை சரிசெய்ய முடியவில்லை. பின்னர், மதியம் 3.30 மணிக்கு மற்றொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்