விளையாட்டு திருவிழா - 11.09.2018 - இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியுடன் நீண்ட சுற்றுப் பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

விளையாட்டு திருவிழா - 11.09.2018 - தோனியை அரசியலில் இழுத்து போட பல்வேறு கட்சிகள் பல்வேறு காலமாக முயற்சித்து வருகின்றனர்.

Update: 2018-09-11 16:09 GMT
விளையாட்டு திருவிழா - 11.09.2018

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் - தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசல்
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியுடன் நீண்ட சுற்றுப் பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடைசி டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைகிறதோ , இல்லை சமன் செயகிறதோ, டெஸ்ட் தொடர் கோலிக்கு ஒரு மோசமான அனுபவமாகவே அமைந்தது. கடைசி டெஸ்ட்டில் இந்திய அணிக்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் போட்டியிலாவது தவான் அடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தவானைத் தொடர்ந்து, புஜாரா, கோலி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சத போல் இருந்தது. இருப்பினும் நிதானமாக விளையாடிய ரஹானே தேவையில்லாத ஷாட் ஆடி 37 ரன்களில் வெளியேறினார். தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய கே.எல். ராகுல் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்ர். ஒரு கட்டத்தில் ஒருநாள் போட்டியை போல் ஆடிய ராகுல்.. டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடரின் கடைசி நாளில் கே.எல். ராகுல் பார்ம்க்கு திரும்பியது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. 

ஓய்வை அறிவிக்கப்போகிறாரா ரோஜர் ஃபெடரர் - ஃபெடரர் சாதனையை நெருங்கும் நடால்
டென்னிஸ் உலகில் ஆடவர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ரோஜர் ஃபெடரர். இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் பெடரர், நடப்பாண்டில் ஆஸ்திரேலிய பட்டத்தை வென்றுள்ளார். ஆனால், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேற கூட பெடரர் தவறவிட்டார். ரோஜர் பெடரருக்கும் வயதாகி வருவதால், அவர் ஓய்வு பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் அடுத்த இடத்தில் இருப்பது நட்சத்திர வீரர் நடால், 32 வயதான நடாலை பிரெஞ்ச் ஓபனில் வீழ்த்த இதுவரை ஆள் இல்லை. ஆனால் நடாலுக்கு வில்லனாக இருப்பது அவரது உடல்தகுதி தான்.. பெடரரின் சாதனையை முறியடிக்க நடாலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு அவரது உடல் தகுதி ஒத்துழைக்க வேண்டும்.14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று மூன்றாவது இடத்தில் இருப்பது ஜோகோவிச். 31 வயதான ஜோகோவிச் தற்போது டென்னிஸ் ஜாம்பவான் பீட் சாம்பிராஸ் சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டாக காயத்தால் அவதிப்பட்டு வந்த ஜோகோவிச், தற்போது மீண்டும் பார்மிக்கு திரும்பி, நடப்பாண்டில் மட்டும் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைவென்றுள்ளார். தனது சாதனையை யாரும் நெருங்க கூடாது என்று போராடும் பெடரர்,  பெடரரின் சாதனையை முறியடிக்க துடிக்கும் நடால், இந்த இரண்டு வீரர்களையும் அச்சறுத்த காத்திருக்கும் ஜோகோவிச் என டென்னிஸ் உலகம் களைக்கட்டுகிறது. இருந்தாலும் இந்த மூன்று வீரர்களுக்கும் வயதாகி விட்டது. இவர்களது இடத்தை பிடிக்க இன்னும் இளம் வீரர்கள் வரவில்லையே என்ற கவலையும் டென்னிஸ் ரசிகர்களிடையே உள்ளது. 

அரசியலில் குதிக்கப் போகிறாரா தோனி? தோனியை குறி வைக்கும் அரசியல் கட்சிகள் சமூக வலைத்தள பதிவால் பரபரப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதனாலேயே தோனியை அரசியலில் இழுத்து போட பல்வேறு கட்சிகள் பல்வேறு காலமாக முயற்சித்து வருகின்றனர். இதற்கு தொடக்க புள்ளியே, கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் தோனி அளித்த பேட்டி தான் விலைவாசி உயர்ந்ததன் காரணமாக பால் குடிப்பதையே நிறுத்திவிட்டேன் என்று நகைச்சுவையாகவும், வெளிப்படையாகவும் தோனி அரசை விமர்சித்தார். இதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு தோனியின் சகோதரரான நரேந்திர தோனி பா.ஜ.க. வில் இணைந்தார். இதனால் தோனியும் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பை வெற்றி, அந்நிய மண்ணில் தோல்வி, ராணுவ வீரர்களுடன் பயிற்சி என தோனியின் பயணம் சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் தோனியை அவரது இல்லத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா சந்தித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் நிகழ்வு தான் அது  என்று பா.ஜ.க. தரப்பிலிருந்து கூறப்பட்டது. இதனால் தோனி பா.ஜ.க.வில் இணைவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில தோனி பங்கேற்றார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று உலா வந்தது.
அதில் பெட்ரோல் பங்கில் தோனி அமர்ந்திருப்பது போல் இருந்ததால், தோனி அரசியலில் குதித்துவிட்டார் என்றும் அவரது ரசிகர்கள் பலர் பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் தான், தோனி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்று தெரியவந்தது. போராட்டத்திற்கு வலு சேர்க்கவே எதிர்க்கட்சிகள் இது போன்ற பதிவை உலவவிட்டதாக பா.ஜ.க. ஆதரவாளர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். தோனி அரசியலுக்கு வந்தாரா என விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் தான் தோனியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.  

உலகின் மிக கடினமான ரிலே பந்தயம் - ஒலிம்பிக் சாம்பியன்களை ஈர்க்கும் போட்டி : காடு, காற்று, தண்ணீரில் நடைபெறும் விளையாட்டு
ரிலே போட்டியை கேள்வி பட்டிருப்போம்.. ஆனால் DOLOMITENMANN ரிலே என்றால் என்ன தெரியுமா..? சாதாரண ரிலே போட்டி என்றால் ஒரு வீரர் பந்தயத்தை முடித்தவுடன் அதே அணியை சேர்ந்த அடுத்த வீரர் பந்தயத்தை தொடங்குவர். இதே போல் தான் DOLOMITENMANN ரிலேவும். ஆனால் இது தடகளத்தில் நடக்காது. போட்டியாளர்கள் முதலில் தரையிலிருந்து ஓடத் தொடங்குவர்.. நகரின் முக்கிய வீதிகளில் ஆரம்பமாகும் இந்த ஓட்டம், திடீரென்று மலைப்பகுதிக்கு சென்று, மலையில் ஏறும் வகையில் போட்டி அமைப்பு மாறும். பின்னர், ஓட்டம் முடிந்தவுடன் அடுத்த வீரர் ஓடத் தயராவார் என்று நினைக்கலாம்.. ஆனால் அது தான் இல்லை.. அந்த அணியை சேர்ந்த அடுத்த வீரர், பாராசூட்டில் பறப்பார். குறிப்பிட்ட தூரம் பாராசூட்டில் பறக்கும் வீரர்கள் தங்களது பந்தயத்தை முடித்தவுடன், சைக்கிளில் தயாராக உள்ள வீரர்கள் தங்களது பந்தயத்தை தொடங்குவர். அவர்களும் கரடு முரடான பாதையில் சைக்கிளில் சுமார் 27 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து பந்தயத்தை முடிப்பர். அவர்கள் முடித்தவன்,  படகில் தயாராக இருக்கும் வீரர்கள் , தங்களது பந்தயத்தை துடுப்பு போட்டு ஓடத்தில் வேகமாக பயணிப்பர்.  பந்தயத்தை முடித்தவுடன் துடுப்புடன் யார் எல்லைக் கொட்டை முடிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். உலகின் மிக கடினமான ரிலே போட்டியாக கருதப்படும் இந்த ரிலே பந்தயம்,  ஆஸ்திரியாவின் டோலோமைட் பகுதியில் 1988ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. இந்த சிக்கலான பந்தயத்தை உருவாக்கியவர் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த WERNER GRESSMAN தான்.  நிலம், காடு, காற்று, தண்ணீரில் நடைபெறும் இந்த வினோதமான ரிலே பந்தயத்தில் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு பல ஒலிம்பிக் சாம்பியன்கள் மற்றும் உலக சாம்பியன்கள் தவறாமல் பங்கேற்பர். 

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து வெற்றி
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 
தகுதி பெற்றுள்ளார். டோக்யோவில் நடைபெற்று வரும் முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை சாயகாவை 21க்கு17, 7க்கு21, 21க்கு13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

கவுண்டி கிரிக்கெட்டில் களமிறங்கிய முரளி விஜய்
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட தமிழக வீரர் முரளி விஜய் , கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார். எஸ்சக்ஸ்  அணிக்காக களமிறங்கிய முரளி விஜய், முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசினார். 95 பந்துகளை எதிர்கொண்டு விஜய் 56 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகளும் அடங்கும். 

அர்ஜூனா விருதுக்கு குத்துச்சண்டை வீரரின் பெயர் பரிந்துரை
ஆசிய போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த குத்துச்சண்டை வீரர் அமித் பாங்கல் பெயர் அர்ஜூனா விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தமது வெற்றிக்கு உத்வேகம் அளிக்கும் என்று அமித் பாங்கல் கூறியுள்ளார்.

இந்தியா Vs  பாகிஸ்தான் நாளை மோதல்
தெற்காசிய கால்பந்து தொடரின் அரையிறுதிச் சற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் நாளை மோதுகின்றன. இதற்காக வங்கதேச தலைநகர் டாக்காவில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : இந்திய வீரர் குர்னிகாலுக்கு வெண்கலம்
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் SKEET ஜூனியர் பிரிவில் இந்திய வீரர் குர்னிகால் சிங் வெண்கலம் வென்றார். தென் கொரியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை இந்திய அணி 22 பதக்கங்களுடன் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை