"விடுதலைப் புலிகள் தங்கம் எங்கே?" "ராஜபக்சே குடும்பத்திற்கு காசு எப்படி வந்தது?"
இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை தீவு, தற்போது மனிதர்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறிவிட்டதாக வருத்தம் தெரிவிக்கும் மக்கள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.;
இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை தீவு, தற்போது மனிதர்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறிவிட்டதாக வருத்தம் தெரிவிக்கும் மக்கள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை இதுவரை இல்லாத சிக்கலை சந்தித்து வருகிறது. அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாதது, டாலர் கையிருப்பில் இல்லாதது போன்றவற்றால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை சந்தித்து வருகின்றனர். நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லை எனக் கூறும் அவர்கள், தற்கொலை செய்யும் நிலைதான் ஏற்படும் என கலங்கி நிற்கிறார்கள்.
மக்கள் கோபம் ஆட்சியாளர்கள் மீது திரும்பியிருக்கிறது. அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் விடுதலைப் புலிகளிடம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட தங்கம் எங்கே? ராஜபக்சே குடும்பத்திற்கு இவ்வளவு சொத்து வந்தது எப்படி என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்.
வரிகளை கூட்டி மக்கள் தலையில் சுமையை இறக்கும் ஆட்சியாளர்கள், தங்கள் சொத்துக்களை விற்று கடனை அடைக்கலாமே என போராட்டம் நடத்தும் மக்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.