ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் - ஹைதியில் பரபரப்பு
ஹைதி நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆடை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி போராட்டம் நடத்தினர்.;
ஹைதி நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆடை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி போராட்டம் நடத்தினர். அமெரிக்க ஆடை விற்பனையாளர்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக ஊதிய பிரச்சினை குறித்து குரல் கொடுத்து வருகின்றனர். தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூட ஊதியம் போதவில்லை என்று குற்றம் சாட்டி பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் போர்ட் ஆ பிரின்ஸ் பகுதியில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.