54 சீன செயலிகள் முடக்கம் | China | App Banned

இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவை சேர்ந்த மேலும் 54 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.;

Update: 2022-02-15 08:03 GMT
இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் விதமாக செயல்படும் சீன செயலிகளை அடையாளம் கண்டு மத்திய அரசு, தடை விதித்து வருகிறது.  

 கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டிக் டாக், வீ சாட் (we chat) உள்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. அதே ஆண்டு ஆகஸ்ட்டில் 47 செயலிகளையும்,  செப்டம்பர் மாதம் 117 செயலிகளையும், நவம்பர் மாதம் 43 செயலிகளையும் மத்திய அரசு தடை செய்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது 54 சீன செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பப்ஜிக்கு மாற்றாக பார்க்கப்பட்ட கரீனா பிரீ பையர் விளையாட்டு செயலி, பியூட்டி கேமரா, வைவா வீடியோ எடிட்டர், ஆப்லாக் (AppLock) செயலிகள் இதில் அடக்கம்.

இந்த செயலிகள் கூகுள் ப்ளே, ஆப்பிள் ப்ளே ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட செயலிகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு மாற்று பெயரில் செயல்பட்ட செயலிகளும் அடக்கம் என தெரியவந்துள்ளது.

செயலிகள் பயனாளர்களிடம் முக்கிய அனுமதியை பெற்று, அவர்களின் முக்கிய தரவுகளை சட்டவிரோதமாக சேமித்து, சீனாவிலிருக்கும் சர்வர்களுக்கு அனுப்புகின்றன என்றும் அதுவே தடைக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செயலிகள் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்திய பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் உள்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இதுவரை இந்தியாவில் 320-க்கும் அதிகமான செயலிகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

54 சீன செயலிகள் முடக்கம்
 
இந்திய இறையாண்மை, பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல் - செயலிகளுக்கு தடை விதிப்பு
 
2020-ம் ஆண்டு தடை 
ஜூன் - 59 செயலிகள்
ஆகஸ்ட் - 47 செயலிகள்
செப்டம்பர் - 117 செயலிகள்
நவம்பர் - 43 செயலிகள்

54 சீன செயலிகளுக்கு தடை விதிப்பு
உள்துறை அமைச்சகம் அதிரடி

கரீனா பிரீ பையர் செயலி, 
பியூட்டி கேமரா,  
வைவா வீடியோ எடிட்டர் செயலிகள் அடக்கம்

"செயலிகள் கூகுள் ப்ளே, 
ஆப்பிள் ப்ளே ஸ்டோர் தளங்களில்
இருந்து நீக்கம்"  

ஏற்கனவே தடை செய்யப்பட்டு
மாற்று பெயரில் செயல்பட்ட
செயலிகளும் இதில் அடங்கும்

"பயனாளரின் முக்கிய தரவுகளை 
சட்டவிரோதமாக சேமிக்கின்றன"

"முக்கிய தரவுகளை 
சீனாவிலிருக்கும்
சர்வர்களுக்கு அனுப்புகின்றன"
 
"இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு 
பாதகமான நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளன" 

"இந்திய பாதுகாப்பிற்கு கடும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆப்கள்" 

2020 முதல் 320-க்கும் 
அதிகமான செயலிகள் 
முடக்கப்பட்டுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்