இங்கிலாந்தின் அடுத்த அரசி கெமில்லா?! 2ம் எலிசபெத் எழுதிய கடிதம்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசராகும் போது, அவரது மனைவி கெமில்லாவை அரசியாக்க பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத் விருப்பம் தெரிவித்துள்ளார்.;
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசராகும் போது, அவரது மனைவி கெமில்லாவை அரசியாக்க பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத் விருப்பம் தெரிவித்துள்ளார். அரியணையில் ஏறி 70 ஆண்டுகள் நிறைவடந்த நிலையில், இது குறித்து எலிசபெத் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பிரிட்டிஷ் மக்கள் தனக்குக் காட்டிய விஸ்வாசம் மற்றும் அன்பை நினைவு கூறும் தருணமிது என்று குறிப்பிட்டார். மேலும், சார்லஸும் கெமில்லாவும் இதே ஒத்துழைப்பைப் பெறுவார்கள் என்று நம்புவதாகவும், சரியா நேரம் வருகையில் தனது நேர்மையான சேவையின் காரணமாக கெமில்லா இங்கிலாந்தின் அரசியாக நியமிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.