"ஒமிக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது" - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒமிக்ரான் அலைக்கு 2 தவணை தடுப்பூசிகள் மட்டும் போதாது என்று எச்சரித்துள்ளார்.;
இது குறித்து பேசிய அவர், ஒமிக்ரான் வகை கொரோனா மற்ற வகை கொரோனாவை விட பாதிப்பு குறைவானதா என்பது குறித்து இன்னும் விஞ்ஞானிகளுக்கே தெரியாததால், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஒமிக்ரான் பேரலை வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், ஒமிக்ரான் அதிவேகமாகப் பரவக் கூடியது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.