கருப்பு பெட்டி - பெயர் வந்தது எப்படி?
ஹெலிகாப்டரோ விமானமோ விபத்துக்குள்ளானா அதுல இருந்த கருப்பு பெட்டியை தேடுவோம். கருப்பு பெட்டிக்கு ஏன் அந்த பேரு வந்துச்சுனு எங்க போயி தேடுறது? எல்லாம் நம்ம வார்த்தை வரலாறு பகுதியிலதான்;
கருப்பு பெட்டி... அதாவது பிளாக் பாக்ஸ் அப்படீங்கறது விமானம், ஹெலிகாப்டர்னு வானத்துல பறக்குற ஒவ்வொரு வாகனத்துலயும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு கருவி. உண்மையில அது ஒரு மெமரி கார்டு மாதிரிதான். ஃப்ளைட்லயும் ஹெலிகாப்டர்லயும் பைலட்கள் பேசுறதை எல்லாம் இந்தப் பெட்டி பதிவு பண்ணிக்கிட்டே வரும். விபத்துக்குள்ளான விமானத்துல கடைசியா விமானிகள் என்ன பேசிக்கிட்டாங்கனு தெரிஞ்சிக்க இது ஒண்ணுதான் வழி. எந்த நெருப்புலயும் சேதமாகாத அளவுக்கு... தண்ணி உள்ளே புகாத அளவுக்கு.... இது ஸ்ட்ராங்கா உருவாக்கப்பட்டிருக்கும். விபத்து நடந்த இடத்துல கூட பளிச்சுனு கண்ணுக்கு தெரியணும்கிறதுக்காகதான் இது பளீர்னு ஆரஞ்சு கலர்ல பெயின்ட் அடிக்கப்படுது. பாக்கறதுக்கு இது பெட்டி மாதிரிதான் இருக்கும்னு கூட சொல்ல முடியாது. உருளையாவோ, தட்டையாவோ, நீளமாவோ கூட ப்ளாக் பாக்ஸ் இருக்கலாம். அப்படி இருந்தும் அதை ஏன் ப்ளாக் பாக்ஸ்னு கூப்பிடுறோம் தெரியுமா?