மலை உச்சியில் திருமண நிகழ்ச்சி - மலையேற்றத்தில் திருமணம் செய்த ஜோடி

பொலிவியாவில் பனிமலையின் உச்சிக்கு சென்று இளம்ஜோடி திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...;

Update: 2021-08-29 13:57 GMT
சினிமாவிலேயே அரிதான இதுபோன்ற திருமண காட்சிகளை, நிஜத்தில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர் பொலிவியாவை சேர்ந்த இளம் ஜோடியினர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் தலைநகர் La Paz-ஐ சேர்ந்த இந்த இளம் ஜோடி, மலையேற்றம் செய்து திருமணம் செய்துக்கொள்ளும் ஆசையுடன், அங்குள்ள இல்லிமணி என்ற மிக உயரிய மலையில் பயணத்தை தொடங்கியது. லா பெஸ் நகரில் இருந்து சுமார் மூன்று நாட்கள் மலையேற்றம் செய்த இந்த இளம் ஜோடி, கடல் மட்டத்தில் இருந்து 6,439 மீட்டர் அதாவது, 21,125 அடி உயரத்தில் வைத்து மணமுடித்துக்கொண்டனர். இயல்பான திருமண நிகழ்ச்சி எப்படி இருக்குமோ, அதே போன்று திருமண ஆடை அலங்காரத்துடன் வந்த இளம் ஜோடிக்கு, சக மலையேற்ற குழுவினரே திருமணம் செய்து வைத்து பனிக்கட்டிகளை பூக்களாக தூவி மனதார வாழ்த்தினர். மலையின் உச்சியில் மணமுடித்தது சொர்க்கத்தில் மிக அருகில் இருந்து திருமணம் செய்தது போன்று இருந்ததாகவும், கடவுளே ஆசிர்வதித்ததை போன்று உணர்வதாகவும் நெகிழ்ந்துள்ளனர். கடலுக்கு அடியில் திருமணம், ஆகாயத்தில் பறந்தபடி திருமணம்.. இப்படி பலவித திருமணங்களை போன்று இந்த மலை உச்சி திருமண நிகழ்வும், காண்போரை ரசிக்க வைக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்