புகழ்பெற்ற இருசக்கர வாகன பேரணி - கொரோனா பரவலுக்கு மத்தியில் நடக்கும் நிகழ்வு
அமெரிக்காவின் தெற்கு டகோடாவில் உள்ள ஸ்டர்கிசில் புகழ்பெற்ற இருசக்கர வாகன பேரணி துவங்கியது.;
உலகப் புகழ்பெற்ற இந்தப் பேரணி திருவிழாவைப்போல வருடந்தோறும் 10 நாட்கள் நடைபெறும். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்நிகழ்வு துவங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பேரணியில் பங்கேற்பவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் கடந்த வாரம் அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.