பிரேசில் அதிபருக்கு ஆதரவாக பைக்கில் பேரணி - நூற்றுக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு ஆதரவாக இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் பேரணியாக சென்றனர்;
பிரேசிலில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கொரோனா விவகாரத்தில் போல்சனேரோவுக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது ஆதரவாளர்களும் ஆதரவுப் பேரணி நடத்தி வரும் நிலையில், சா பவ்லோவில் நடந்த பேரணியை அதிபர் போல்சனேரோ பார்வையிட்டார்.