அமெரிக்க அரசு அளிக்கும் கிரீன் கார்டுகள் - 1 லட்சம் கிரீன் கார்டு வீணாகும் அபாயம்

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினரின் கனவு, அங்கு நிரந்தரமாக தங்க, அனுமதி அளிக்கும் கிரீன் கார்ட் அட்டையை பெறுவது தான். ஆனால், இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் கிரீன் கார்டு அட்டைகள் வீணாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.;

Update: 2021-08-07 11:42 GMT
ஒவ்வொரும் ஆண்டும், அமெரிக்காவில் பணி புரியும் வெளிநாட்டவர்களுக்கு, சுமார் 1.4 லட்சம் கிரீன் கார்ட்டுகள் வழங்கப்படுவது வழக்கம். இவற்றில் கணிசமானவர்கள் இந்தியர்கள். இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டு, 2 லட்சம் 61 ஆயிரத்து 500 கிரீன் கார்ட்களை, வழங்கப் போவதாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இவற்றை செப்டமம்பர் 30க்குள் வழங்க வேண்டும் என்று அமெரிக்க குடியிரிமை சட்டம் கூறுகிறது. ஒரு ஆண்டுக்கான கிரீன் கார்டுகள், அந்த ஆண்டு செப்டம்பர் 30க்குள் முழுமையாக வழங்கப்படவில்லை என்றால், வழங்கப்படாதவை வீணாகிவிடும். கிரீன் கார்டுகள் வழங்கும் பணிகள் தற்போது மிக மெதுவாக நடை பெறுவதால், இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகி விடும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பணியாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, கிரீன் கார்டுகள் வீணாவதை தடுக்க ஜோ பைடன் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
என்று கோரி அமெரிக்காவில் பணி புரியும் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த 125 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இம்பாக்ட் என்ற இந்திய அமெரிக்கர்களுக்கான கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நெய்ல் மக்ஜியா, இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து, அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை செய்யக் கோரியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்