ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாடு - இந்திய வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு

தஜிகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.;

Update: 2021-07-14 07:09 GMT
தஜிகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.இந்தியா, சீனா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளின் கூட்டமைப்பான ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில், ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நான்கு நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. ஜூலை 13 மற்றும் 14ல் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது.ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறி வரும் நிலையில், தாலிபான் படைகள் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளை கைபற்றி வருவதைப் பற்றியும், இதனால் இந்த பிராந்தியத்தில் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் தாலிபான்கள் ஆதிக்கம் பற்றியும், லடாக்கில் உள்ள இந்திய சீனா எல்லைப்பகுதி பற்றிய பிரச்சனைகளையும் இருவரும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.செப்டம்பர் 16, 17இல் நடைபெற உள்ள ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளின் அதிபர்கள் மாநாட்டுக்கான முன் தயாரிப்பு பணிகள் இந்த மாநாட்டில் முன்னெடுக்கப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்