2 கோள்கள் சந்தித்த அரிய வானியல் நிகழ்வு - வெறும் கண்களால் பார்த்து ரசித்த பொதுமக்கள்
செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்கள் சந்தித்த அரிய வானியல் நிகழ்வு குறித்து விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.;
செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்கள் சந்தித்த அரிய வானியல் நிகழ்வு குறித்து விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பூமிக்கு நெருக்கமான செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்கள் சந்தித்த அரிய வானியல் நிகழ்வு செவ்வாய்கிழமை நடைபெற்றது. இரண்டு கோள்களும் வெறும் 0 புள்ளி 5 டிகிரி இடைவெளியில் காணப்பட்ட இந்த நிகழ்வின்போது, சுமார் 4 டிகிரி தொலைவில் பிறை சந்திரன் தென்பட்டது. இந்த அரிய வானியல் நிகழ்வின் சிறப்பம்சமே, தொலைநோக்கி போன்ற எந்தவித கருவியும் இன்றி வெறுங்கண்ணால் பார்க்க முடிந்ததுதான்.சூரியன் மறைந்தவுடன், சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு,தென்பட்ட இந்தக்காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.ஆனால், உண்மையில் இரண்டு கோள்களும் வானில் ஒன்றையொன்று நெருங்கவில்லை என்றும், இது ஒரு
தோற்ற மயக்கம்தான் எனவும் வானியல் ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.