52 பேரை பலி வாங்கிய தீ விபத்து - உயிர்தப்ப ஓடிய போது 50 பேர் காயம்
வங்க தேசத்தில் உள்ள பழச்சாறு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.;
தலைநகரான டாக்காவிற்கு அருகே ரூப்கஞ்ச்சில் அமைந்துள்ள பழச்சாறு தொழிற்சாலையில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் 6 மாடி கட்டிடம் முழுவதும் தீ மளமளவென பரவியது. அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள் உயிர் தப்ப ஓடியபோது 50 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 18 தீயணைப்பு குழுவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தொழிற்சாலையில் வேலை பார்த்த தங்கள் குடும்பத்தினர் பலரையும் காணவில்லை என கூறி தொழிற்சாலை முன்பு அவர்களது உறவினர்கள் சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு அம்சங்களை செய்யப்படாததே விபத்துக்கான காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
==