மாரடோனாவுக்கு மருந்து வாங்கியதில் முறைகேடா? -மருத்துவர்கள் வீட்டில் தொடர் சோதனை -முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் மனநல மருத்துவர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.;

Update: 2020-12-02 10:11 GMT
முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் மனநல மருத்துவர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மறைந்த மரடோனாவின் மருத்துவ சிகிச்சையில் முறைகேடுகள் நடந்ததாக பிரச்சினை கிளம்பிய நிலையில் அர்ஜென்டினா போலீசார் பல்வேறு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மரடோனாவுக்கு மனநல மருத்துவராக இருந்த அகஸ்டினாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் பல்வேறு சோதனைகள் செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். ஏற்கனவே மரடோனாவின் பிரத்யேக மருத்துவர் லியோபோல்டோ வீட்டில் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.    
Tags:    

மேலும் செய்திகள்