எல்லை பகுதிகளில் ஒலிபெருக்கிகளை அமைத்துள்ள சீனா - இந்திய வீரர்களுக்கு மனரீதியான பாதிப்பை கொடுக்க முயற்சி
லடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை இந்திய வீரர்களுக்கு எதிராக சீன ராணுவம் கையாள தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.;
லடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை இந்திய வீரர்களுக்கு எதிராக சீன ராணுவம் கையாள தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. லடாக் எல்லையில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம், இந்திய ராணுவ வீரர்களுக்கு மன உளைச்சலை கொடுக்கும் பாடல்களை பஞ்சாபி மொழியில் சீனா தொடர்ந்து ஒலிபரப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு
ஜப்பான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். 534 உறுப்பினர்களில் 377 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்,. ஜப்பானில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து வந்த ஷின்ஜோ அபே வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகியதையடுத்து யோஷிஹைட் சுகா தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு 10 கோடி தடுப்பூசி - ரஷியா விற்பனை செய்ய சம்மதம்
கொரோனாவை கட்டுப்படுத்தும் உலகின் முதலாவது தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மாதம் அறிவித்தார். அந்த தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, அடினோ வைரல் வெக்டர் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 கோடி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு, ரஷிய நேரடி முதலீட்டு நிதியம், இந்தியாவின் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
"பாலியல் வன்கொடுமைக்கு ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனை"
பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பொது இடத்தில் தூக்கில் இட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்,. பாலியல் சம்பங்களில் ஈடுபடுபவர்களை ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனையாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.