இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.;
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 275 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்தின் பில்லிங்ஸ் விளாசிய சதம் வீண் ஆனது.