"4 லட்சம் டாலர்களுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் மீது வருமான வரியை உயர்த்தப்போகிறேன்" - ஜோ பிடன்

தாம் அமெரிக்க அதிபரானால் ஆண்டு 4 லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் மீது வருமான வரியை உயர்த்தப் போவதாக ஜோ பிடன் அறிவித்துள்ளார்.;

Update: 2020-08-24 11:44 GMT
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அதிகம் சம்பாதிப்பவர்கள் நியாயமான பங்கு வகிக்க வேண்டும்  என்று ஜோ பிடன் வலியுறுத்தினார். 78 வயதான ஜோ பிடனின் உடல் வலிமை, ஆரோக்கியம்  குறித்து  டிரம்ப் கேள்வி எழுப்பி இருந்தார் . அதற்கு பதிலளித்த ஜோ பிடன் 70 வயதுக்கு மேலானவர்கள் பற்றி இப்படி கேள்வி எழுப்புவது  நியாயம் தான் என்றார்.  அதே நேரம் பொது மக்கள் தம்மை கூர்ந்து கவனித்தால் இதில் தெளிவு கிடைக்கும் என்றார். அமெரிக்க அதிபரின்  பதவி காலம்  நான்கு ஆண்டுகள் என்பதால் ஒரு முறை மட்டுமே அதிபராக இருப்பீர்களா  என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு  அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு 8 ஆண்டுகள் அதிபராக பணியாற்றுவேன் என்று பிடன் பதிலளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்