தடையை மீறி நடந்த இரவு கேளிக்கை விடுதி - நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
பெருவில் தடையை மீறி நடைபெற்ற இரவு கேளிக்கை விடுதியில், கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.;
பெருவில், தடையை மீறி நடைபெற்ற இரவு கேளிக்கை விடுதியில், கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர கேளிக்கை விடுதிகள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லாஸ் ஆலிவோஸ் பகுதியில் தடையை மீறி நடந்த கேளிக்கை விடுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பதறியடித்து வெளியேறினர். வெளியே செல்வதற்கு ஒரே ஒரு குறுகிய வாயில் மட்டுமே இருந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 12 பெண்கள் உட்பட13 பேர் உயிரிழந்தனர்.
ராணுவங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 2020ஆம் ஆண்டுக்கான ராணுவ விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ துருப்புகள் கலந்துக்கொண்டுள்ளன. ராணுவ டேங்கர்களுக்கு இடையேயான பந்தயம் மற்றும் பீரங்கி குண்டுகளை சுடும் போட்டிகள் நடைபெற்றது. இந்த ராணுவ விளையாட்டு போட்டிகள் வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.