முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு - பீஜிங் நிர்வாகம் அறிவிப்பு

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-08-21 09:58 GMT
கடந்த 13 நாட்களாக அங்கு கொரோனா தொற்று எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில் பீஜிங் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் சிலர் முக கவசம் இன்றி சர்வ சாதாரணமாக உலா வருகிறார்கள். ஆனால் பலர், முகக் கவசம் அணிவதை விரும்புகிறார்கள். முகக் கவசம் அணிந்திருந்தால் பாதுகாப்பு உணர்வுடன் இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், முகக் கவசம் இன்றி செல்லும் போது, எதிரில் வரும் சிலர் அச்சப்படுவதை பார்த்து முகக் கவசம் அணிவதை தொடர்வதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் முகக் கவசம் வேண்டாம் என்ற பீஜிங் நிர்வாகத்தின் அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக பெரும்பாலோனார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்