"சீனாவுக்கு எதிரான நாடுகளுக்கு அனைத்து உதவிகள் செய்வோம்" - அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தகவல்

தென்சீனக் கடல் பிரச்சனையில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.;

Update: 2020-07-16 13:17 GMT
தென் சீனக் கடல் பகுதீயில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் நாடுகளுக்கு, ஆசியான் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் அந்நாடுகள் முறையிட தேவையான உதவிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் அமெரிக்க உறுதுணையாக இருக்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவுக்கு எதிரான அணியை உருவாக்க அமெரிக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வரும் திங்களன்று டென்மார்க் மற்றும் இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிரான இங்கிலாந்தின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ள மைக் பாம்பியோ, அந்த நிறுவனம் நாடுகளை வேவு பார்க்க சீனாவால் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இதனிடையே, அமெரிக்கா தடை விதிக்கும் நடவடிக்கை வேடிக்கையானது என்று சீனா தெரிவித்துள்ளது. ஆசியான் பிராந்தியத்தில் குழப்பத்தை உருவாக்கி, அமைதியற்ற சூழலை உருவாக்கவே தென்சீனக் கடல் விவகாரத்தில், தேவையின்றி அமெரிக்கா செயல்பட்டு வருவதாகவும் சீனா வெளியுறவுத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்