"ஒருபோதும் இந்திய வீரர்கள் எல்லை தாண்டக்கூடாது" - சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விளக்கம்

சீனா எல்லையை இந்திய ராணுவ வீரர்கள் கடக்க கூடாது என, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவு லிஜியான் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-06-16 13:08 GMT
தலைநகர் பெய்ஜிங்கில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், லடாக் மோதல் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, இந்தியாவுக்கு முழுமையான பிரதிநிதித்துவங்களையும் போராட்டங்களையும் சீனா பதிவு செய்வதாக குறிப்பிட்டார். எல்லை சம்பந்தமாக, இந்தியா - சீனா இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை ஆர்வத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். எல்லைப்பகுதியில் உள்ள வீரர்களை, கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அதே சமயம் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை கடக்க கூடாது என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்