"கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசி" - பாதுகாப்பானது என அமெரிக்க நிறுவனம் தகவல்
அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள மருந்து நல்ல செய்தியை தந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.;
அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள மருந்து நல்ல செய்தியை தந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் 45 பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவு திருப்திகரமாக உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், இது செலுத்தப்பட்ட அனைவரின் உடலிலும் கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கியதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை நேற்று அந்த நிறுவனம் வெளியிட்ட நிலையில், அதன் பங்குகள் விற்பனை 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.