விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரம் - பிரிட்டன் உச்சநீதிமன் மேல்முறையீடு...

விஜய் மல்லையா மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.;

Update: 2020-05-15 04:35 GMT
விஜய் மல்லையா மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒருவேளை 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாத நிலை ஏற்பட்டால், தம் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய விஜய் மல்லையா கோர முடியும் என கூறப்படுகிறது. இதற்காக, நாடு கடத்தும் அவகாசத்தை நீட்டிக் கோரி இந்தியா தரப்பில் இங்கிலாந்து அரசு சட்ட சேவை பிரிவு புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும். எனினும், 28 நாட்களுக்குள்  விஜய் மல்லையாவை நாடு கடத்தி வரப்பட்டு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் என இந்திய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்