ராஜபக்சே அமைச்சரவையில் மேலும் ஒருவர் பதவியேற்பு

இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், மேலும் ஒரு அமைச்சர் பதவியேற்றுள்ளார்.;

Update: 2018-10-31 04:02 GMT
இலங்கை  பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்று இருப்பதில் தொடர்ந்து சர்ச்சைகளும் குழப்பங்களும் நீடித்து வருகிறது. ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த, ராஜபக்சேவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து அதிபர் ஸ்ரீ சேனா முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதேபோல்  அமைச்சரவை அந்தஸ்துள்ள 12 அமைச்சகங்களுக்கான புதிய செயலாளர்கள், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பதவி எற்றுக்கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்