மெக்ஸிகோவில் மர்மமான முறையில் 166 சடலங்கள் மீட்பு ...

மெக்ஸிகோவின் கிழக்கு மாகாணமான வெராகுருஸில் மர்மமான முறையில் 166 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2018-09-07 05:08 GMT
வெராகுருஸ் மாகாணம் போதை பொருள் கடத்தல் கும்பலின்  புகலிடமாக திகழ்வதால் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. அங்கு தற்போது கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த சடலங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை இன்னும் அறிவிக்காத நிலையில், 200 க்கும் அதிகமான துணி மற்றும் 100க்கு அதிகமான அடையாள அட்டைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 250 சடலங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், காணாமல் போன 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உறவினர்களை இந்த செய்தி பதறவைத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்