சமீப காலமாக பிரபலமடைந்து வரும் "ஸ்னோ கைட்டிங்" சாகச விளையாட்டு

சமீப காலமாக பிரபலமடைந்து வரும் "ஸ்னோ கைட்டிங்" என்ற குளிர் கால விளையாட்டை குறித்து விரிவாக பார்க்கலாம்.

Update: 2018-08-23 06:07 GMT
* காற்றில் பட்டத்தை பறக்க விட ஆசைபடுவோர் ஒரு புறம் , சறுக்கி விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் ஒரு புறம், ஆனால் இவ்விரண்டையும் ஒரு சேர இயற்கை கொஞ்சும் பனி மலைகளில் விளையாடினால்? அது தான் ஸ்னோ கைட்டிங்...

* கையில் பட்டம், காலில்  snow board என்று காற்றில் பறக்கும் பட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப சறுக்கி கொண்டே விளையாடப்படும் இந்த விளையாட்டு, அதிதீவிர சாகச விளையாட்டுகளுள் ஒன்று..

* சாதாரணமாக பட்டத்தை பறக்கவிடுவதிலேயே பல சிரமம், காற்றடிக்கும் திசைதான் பட்டத்தின் வேகத்தை தீர்மானிக்கிறது. இதில் கால்களில் ஸ்னோ போர்ட்களை மாட்டிக் கொண்டு இவர்கள் பல்டி அடிப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. 

* அமெரிக்கா, ஐஸ்லாந்து, நியூஸ்லாந்து உள்ளிட்ட குளிர் பிரதேச நாடுகளில் விளையாடப்படும் இந்த விளையாட்டு குறிப்பாக ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் களைகட்டுகிறது. 

* இதில் தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.போட்டியின் போது வானில்கண்கவர்பட்டங்கள், பறவைகள் கூட்டமாக செல்வது போல் பார்வையாளர்களை கவர்கின்றன. 

* இந்த அதிதீவிர சாகச விளையாட்டெல்லாம்  நமக்கு சரிபட்டு வருமா என யோசித்துக்கொண்டிருந்தவர்களையெல்லாம் ,ஆங்காங்கே  உருவாகியுள்ள சிறப்பு வகுப்புகள் களமாட வைக்கின்றன.

 * குளிர்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணியாக  சாதாரணமாக செல்வோர் கூட, இந்த வகுப்பில் பயிற்சி பெற்று இவ்விளையாட்டை  ஒரு கை பார்க்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்