2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தாரிடம் ஒப்படைத்த ரஷ்யா
பதிவு: ஜூலை 16, 2018, 10:47 AM
2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் பொறுப்பு கத்தாரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற எளிய  நிகழ்ச்சியில், கால்பந்தை ரஷ்ய அதிபர் புடின், கத்தார் நாட்டு லைவர் தமீமிடம் வழங்கினார். 32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை தொடரை  கத்தார் நடத்த உள்ளது. அதன் பின்னர் உலகக் கோப்பை தொடரில் அணிகளின் பங்கேற்பு 48 அணிகளாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.