போலீஸ் வேனில் வைத்து சிறுமிகளிடம் விசாரணை - காவல்துறைக்கு மனித உரிமை ஆணையம் கண்டனம்

போலீஸ் வேனில் சிறுமிகளிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.;

Update: 2021-11-30 06:18 GMT
போலீஸ் வேனில் சிறுமிகளிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், விளாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவா, இவர்  மீது உள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்காக அவரது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது பள்ளியில் படிக்கும் 8 மற்றும் 5 வயது சிறுமிகளை போலீஸ் வேனுக்குள் வைத்து விசாரித்ததாகவும், இதனால் ஏற்பட்ட அச்சத்தில் குழந்தைகள், ஒரு வாரத்துக்கு பள்ளி செல்லவில்லை எனக்கூறி, மனித உரிமை ஆணையத்தில் சிவா புகார் மனு தாக்கல் செய்தார். இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், சிறப்பு உதவி ஆய்வாளரின் அசோக்குமார் நடத்தையால் சிறுமிகள் அச்சத்தின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டதால்,  ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் சிறுமிகளை போலீஸ் வேனில் வைத்து விசாரித்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆணையம், காவல் நிலைய ஆய்வாளர்  மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்