"10.5% இடஒதுக்கீடு - நீதிமன்றம் ரத்து : மோசடி செய்து வாக்குகள் பெற்றவர்களின் பதில் என்ன?" - ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கேள்வி

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2021-11-01 17:30 GMT
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான டுவிட்டர் பதிவில், வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மக்கள் நீதி மய்யம் அப்போதே கண்டித்ததாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தை கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்