முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2021-10-26 09:47 GMT
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சுமார் 811 கோடி ரூபாய்  மதிப்புள்ள டெண்டர்களில் முறைகேடு என கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அப்போது நடந்த விசாரணையில் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதன்பேரில் எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்