கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் சோதனை - "2,650 சவரன் தங்க நகைகள் பறிமுதல்"

தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவனின் சேலம் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் 2 ஆயிரத்து 650 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.;

Update: 2021-10-22 17:08 GMT
தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவனின் சேலம் வீடு உள்ளிட்ட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனையில் இதுவரை 29 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 10 சொகுசு கார்கள், 2 வால்வோ சொகுசு பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், 2 ஆயிரத்து 650 சவரன் தங்க நகைகள், 282 கிலோ வெள்ளி பொருட்கள், 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைப்புத்தொகை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சேலத்தில் 23 இடங்களிலும், திருச்சியில் 6 இடங்களிலும் சென்னை மற்றும் நாமக்கல் தலா 3 இடங்களிலும், கோவையில் 1 இடத்திலும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்