எம்.எட். படிப்பு - ஆன்லைனில் "13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்"
தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்எட்) முதலாம் ஆண்டு சேர்வதற்கு13ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.;
தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்எட்) முதலாம் ஆண்டு சேர்வதற்கு13ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும் எனவும், கூடுதல் விபரங்களுக்கு இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.